முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் பண்ணை அதிபரிடம் சுஷ்மா சகோதரி தோல்வி

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டிகர், அக் 21 - அரியானாவில் பாஜ இம்முறை மெஜாரிட்டியாக 47 இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக தனியாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாஜ சார்பில் போட்டியிட்ட மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சகோதரி வந்தனா தோல்வி அடைந்துள்ளார். அரியானாவில் சபிதான் சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டவர் சுஷ்மாவின் இளைய சகோதரி வந்தனா. தனது சகோதரிக்காக ஆதரவு கேட்டு சபிதான் தொகுதியில் சுஷ்மா தீவிர பிரச்சாரம் செய்தார். ஆனால் எதிர்பாராத வகையில் வந்தனா தோல்வியை தழுவி உள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ. 400 கோடி மதிப்புள்ள கோழி பண்ணை அதிபரும், சுயேட்சை வேட்பாளருமான ஜஸ்பீர் தேஸ்வாலிடம் வந்தனா தனது வெற்றியை பறி கொடுத்து விட்டார். தேஸ்வாலுக்கு 29,3 69 வாக்குகளும், வந்தனாவுக்கு 27,947 வாக்குகளும் கிடைத்தன. இது குறித்து தேஸ்வால் கூறுகையில், மக்கள் உள்ளூர் வேட்பாளரை ஆதரிக்கவே விரும்பியுள்ளனர் என்பதை எனது வெற்றி காட்டுகிறது. ஒரு விஐபி வேட்பாளரை தோற்கடித்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றார். வாக்கு எண்ணிக்கையின் போது மதியம் வரை முன்னணியில் இருந்த வந்தனா பிற்பகலுக்கு பிறகு சரிவடைய தொடங்கினார். நான்காவது இடத்தில் இருந்த தேஸ்வால் பிற்பகலுக்கு பிறகு ராக்கெட் வேகத்தில் பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்களை முறியடித்து வெற்றி அடைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்