முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக உயர்மட்ட கூட்டத்தில் ராஜ்நாத் பங்கேற்கவில்லை

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை,அக்.21

மும்பையில் நேற்று நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில், ராஜ்நாத் சிங் பங்கேற்கவில்லை. எனவே மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியாயின.

மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 123 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனாவுக்கு 63, தேசியவாத காங்கிரஸுக்கு 41, காங்கிரஸுக்கு 42 இடங்கள் கிடைத்துள்ளன. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநில பாஜக சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோரிடம் கட்சி மேலிடம் ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில், ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெறவிருந்த கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ்நாத் சிங் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்.

இதனையடுத்து, புதிய மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி மட்டும் நேற்று நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்