முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் புயல் சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, அக்.21 - கடந்த 12-ஆம் தேதி ஆந்திராவை ஹுட்ஹுட் புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி ஆகிய 4 மாவட்டங்ள் பெரும் சேதத்துக்குளானது.

குறிப்பாக அழகிய நகரமாக விளங்கிய விசாகப்பட்டினம் புயலின் கோரப்பிடியில் சிக்கி உருக்குளைந்து போனது. நகரில் உள்ள அனைத்து மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது. மின்சாரம், இல்லாமலும், தண்ணீர் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் மக்கள் அவதிக்குளானார்கள். புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மீட்பு பணிகல் தீவிரமாக நடந்து வருகின்றனர். முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை முடக்கி விட்டு வருகிறார்.

இந்த நிலையில் புயல் சேதங்களை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். விசாகப்பட்டினம் வந்து இரங்கிய அவர் முதலில் அங்குள்ள உருக்கு ஆலைக்கு சென்றார். புயலினாள் அந்த ஆலை சேதமடைந்தது. அங்குள்ள தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பலத்த சேதமடைந்த கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு கிராம மக்களை சந்தித்து அவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் விஜயநகர் சென்று பார்வையிட்டார். புயலில் உயிரிழந்த குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் இது குறித்து நிருபர்களிடம் கூறும்போது, விசாகப்பட்டினம் நகரை புணரமைக்கும் பொருப்பு மத்திய அரசு கையில் தான் உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கையை செய்ய பாராளுமன்றத்தில் வற்புறுத்துவேன் என்றார்.

ராகுல் காந்தியை கிண்டல் செய்து சந்திரபாபு நாயுடு கூறும்போது, அவர் இங்கு வந்து என்ன செய்ய போகிறார் என்று கூறியிருந்தார். இது பற்றி ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கேட்டப்போது, எனது தந்தை ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் குண்டு பெடிப்பில் கொல்லப்படுவதற்கு முன் விசாகப்பட்டினம் வந்தார். அவருக்கு கடைசியாக அன்புகாட்டிய மக்கள் இங்குள்ளவர்கள் தான். இது எனது மனதில் இருந்து அகல வில்லை. அந்த மக்களுக்கு அன்பு காட்ட அவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்ள ஆட்சியும் அதிகாரமும் தேவையில்லை. இந்த ஊர் மீண்டும் மாநகராக உருவாகும் வரை ஓயமாட்டேன் என்றார்.

ராகுல் காந்தியிடம் மாநில பொறுப்பாளர் திக்விஜய் சிங் முன்னாள் மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் ஆந்திரா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மந்திரிகள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்