முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோயில் யானை பாகன் மீது நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, அக் 22 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் யானைப்பாகன் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி மற்றும் பார்வதி என இரு யானைகள் இருந்தன. இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. தற்போதுள்ள பார்வதி திருவிழாக்களில் பங்கேற்று சுவாமி அம்மன் வீதி உலாக்களில் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் வலம் வருகிறது. கீழ ஆடி வீதியில் உள்ள யானை நிறுத்துமிடம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானையை பராமரிக்க 2 பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யானைக்கு புல் மற்றும் தாவர தழைகள் வாங்கி தினமும் அளிக்க தனி நிதி அளிக்கப்பட்டுள்ளது. யானையை திருவிழா மற்றும் கோயில் நிகழ்ச்சிகளை தவிர வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று பாகன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆடி வீதிகளில் யானையை நிறுத்தி பக்தர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

பார்வதி யானையை வைத்து பக்தர்களிடம் தொடர்ந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து பாகன் மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான நடராஜனிடம் கேட்ட போது, கோயில் யானையை வைத்து பக்தர்களிடம் பணம் வசூலிக்க கூடாது என எச்சரித்த நிலையில் தொடர்ந்து தவறை செய்ததால் ஒரு பாகனை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளோம் என்றார். திருக்கோயில் வளாகத்தில் பசுக்கள், காளைகள், ஒட்டகமும் வளர்க்கப்படுகின்றன. தனி கூடங்களில் அவை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்