முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர பாஜக வெற்றி: சிவசேனா விமர்சிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக் 22 - மகராஷ்டிரத்தில் தெளிவான தீர்ப்பை மக்கள் வழங்காத போதிலும் பாஜகவினர் வெற்றி முரசை கொட்டுகின்றனர் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்ததும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நான்கு, ஐந்து முனைப்போட்டி நிலவியதும் பாஜகவுக்கும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் பலனளித்துள்ளது. குறிப்பாக எங்கள் கூட்டணி முறிவால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் பலனடைந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது இந்த இரு கட்சிகளும் சேர்ந்தே 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆனால் தற்போது இக்கட்சிகள் தலா 40 தொகுதிகளுக்கு மேல் வென்றுள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பாக இப்போதைக்கு சிவசேனா கருத்து தெரிவிக்காது. ஏனெனில் குளறுபடியான தீர்ப்பை அளித்த சக்திவாய்ந்த வாக்காளர்களின் கருத்து தான் முக்கியமானது. எந்த கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் மாநிலத்தின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவுக்கு ஆதரவாக காணப்பட்ட அலை பின்னர் தனது சக்தியை இழந்து விட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிவசேனாவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என்று நினைத்தோம் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்