முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலி்ப்கார்ட் மீது விசாரணை கிடையாது: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், அக் 22 - மெகா பில்லியன் விற்பனை நாள் நடத்திய பிலிப்கார்ட் நிறுவனம் மீது விசாரணை கிடையாது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உலக அளவில் பிரபலமான நிறுவனம் பிலிப்கார்ட். இந்த நிறுவனம் கடந்த 6ம் தேதி மிக பெரிய அளவில் தள்ளுபடி விலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக அறிவித்தது. ஏராளமான பொருட்களுக்கு சலுகைகளை அறிவித்து விற்பனை செய்தது. அன்றைக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இணையத்தை முற்றுகையிட்டதால் அதன் தளம் முடங்கியது. மேலும் அன்றைய தினம் நேரடி விற்பனையாளர்கள் பலரும் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கடந்த 8ம் தேதி டெல்லியில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இது தொடர்பாக எங்களுக்கு ஏராளமான புகார்களும் தகவல்களும் வந்துள்ளன. அதனை பரிசீலித்து விசாரணை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். அன்றைய தினம் சிறிய வர்த்தகர்கள் தங்களது கவலைகளை எங்களிடம் தெரிவித்திருந்தனர். இணையவழி வர்த்தகத்தில் விதிமுறைகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் அவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பாஜ கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மெகா பில்லியன் விற்பனை நாள் நடத்திய பிலிப்கார்ட் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்துவது குறித்து எந்த திட்டமும் கிடையாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்