முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதி மக்களுக்கு 12000 புடவைகள் தீபாவளி அமைச்சர் பரிசு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, அக் 22 - லோக்சபா தேர்தலின் போது அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட பலரும் தயக்கம் காட்டிய போது பாஜ சார்பில் துணிச்சலாக களத்தில் குதித்தவர் ஸ்மிருதி இராணி. பின்னர் அவர் அங்கு தோல்வியடைந்தார். இருந்த போதிலும் மத்திய பாஜ அரசின் பிரதமரான மோடியின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதனையடுத்து அவருக்கு மத்திய மனிதவள துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. பள்ளி படிப்பை கூட தாண்டாத ஸ்மிருதிக்கு கல்வி அமைச்சர் பதவியா என காங்கிரஸ் கட்சியின் கடுமையான விமர்சனத்தையுனம் எதிர்கொண்டார். ஆனால் இதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு தற்போது வெற்றிகரமாக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

தற்போது ஸ்மிருதி இராணி மக்களுக்கு தனது சார்பாக 12 ஆயிரம் புடவைகளை தீபாவளி பரிசாக அனுப்பி உள்ளார். அதனை தீபாவளி பரிசு என்று வைத்து கொண்டாலும் சரி, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் என்று எடுத்து கொண்டாலும் சரி என்கின்றனர். அவரது ஆதரவாளர்கள் ஸ்மிருதி இராணியின் தீவிர ஆதரவாளரான விஜய் குப்தா என்பவர் கூறுகையில் தசராவுக்கே வழங்க திட்டமிட்டிருந்தோம். பின்னர் அதனை தீபாவளியை ஒட்டி வழங்க முடிவு செய்து தற்போது 15 ஆயிரம் புடவைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். சுமார் 12 ஆயிரம் புடவைகள் வழங்கப்பட்டு விட்டன. இன்னும் 2 ஆயிரம் புடவைகள் வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக சூரத்தில் இருந்து புடவைகள் வரவழைக்கப்பட்டன என்றார். இந்த புடவைகள் அனைத்தும் கவுரிகஞ்ச், திலோய், ஜகதீஷ்பூர், அமேதி, சலோன் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டன என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago