முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜர் சாலையில் அமைச்சர் - மேயர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.22 - மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் . எஸ்.பி.வேலுமணி ,சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கடந்த நான்கு நாட்களாக பெய்து வந்த மழையினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்கள் சரிசெய்யும் பணியினை ஆய்வு செய்தார்கள்.

காமராஜர் சாலையில் (தலைமைச் செயலகம் அருகில்) ஏற்பட்டுள்ள பள்ளம், ஜி.பி. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம், சாந்தோம் நெடுஞ்சாலையில் (அம்மா உணவகம் எதிரில்) உள்ள பள்ளம் ஆகியவற்றை மாநகராட்சி பணியாளர்கள் "கோல்டுமிக்ஸ்" கலவை கொண்டு நிரப்பி, பள்ளத்தினை சரிசெய்யும் பணியினை ஆய்வு செய்தார்கள்.

கோல்டுமிக்ஸ் கலவையானது தண்ணீர் இருந்தால்கூட பிரியாமல் விரைந்து செட் ஆகக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் விலை ஒரு டன் ரூ. 17,500 ஆகும், இக்கலவையினை சென்னை மாநகராட்சி 500 டன்கள் கொள்முதல் செய்து மழையினால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்து வருகிறது. மேலும், சாலையை சரிசெய்யும் பணியில் நவீன சாலை வெட்டும் இயந்திரம் மற்றும் காம்பாக்டர் இயந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ஜி.பி.சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்கள் கழிவுநீரை லாரி மூலம் அகற்றும் பணியினையும் அமைச்சர்எஸ்.பி.வேலுமணி , மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்தார்கள்.

நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி , மேயர் சைதை துரைசாமி , சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில், தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டும், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் கோல்டுமிக்ஸ் கலவை கொண்டு சரிசெய்தும், சாலையில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டும், எல்லா பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.மேலும், நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி , மேயர் சைதை துரைசாமி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.இந்த ஆய்வின்போது, அவர்கள் அங்கு வழங்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டு, உணவின் தரம், சுவை, சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , மேயர் சைதை துரைசாமி அந்த அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் இங்கு வழங்கப்படும் உணவுகள் பற்றி கேட்டார்கள். அதற்கு பொதுமக்கள் உணவு விலை குறைவாகவும், தரமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாக தெரிவித்து, எங்களைப் போன்ற கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் தரமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை வழங்கிய மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கோடி புண்ணியம் எனத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.இந்த ஆய்வுகளின்போது, முதன்மைச் செயலர்/ஆணையாளர், சென்னை மாநகராட்சி

விக்ரம் கபூர், தமிழ்நாடு ஜவுளிக்கழகத் தலைவர் விருகை. வி.என்.ரவி , சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். பி. சந்திரமோகன், மத்திய வட்டார துணை ஆணையாளர் அருள் சுந்தர் தயாளன் , வடக்கு வட்டார துணை ஆணையாளர்

. எம். லட்சுமி , 9வது மண்டலக் குழுத்தலைவர். எஸ். சக்தி , மாமன்ற உறுப்பினர் கே. மலைராஜன் , சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்