முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக்.22 - மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றி பெறாததால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து இனிமேல்தான் முடிவு எடுக்கும்.

அரியானாவில் 90 தொகுதி களிலும் பிஎஸ்பி போட்டியிட்டது. இதில் பிரித்லா தொகுதியில் போட்டியிட்ட பிஎஸ்பி வேட்பாளர் டெக் சந்த் சர்மா மட்டுமே வெற்றி பெற்றார். இவர் பாஜக வேட்பாளர் நைன்பால் ராவத்தை 1,179 வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித் தார். இங்கு ஒட்டுமொத்தமாக 4.4 சதவீத வாக்குகள் இக்கட்சிக்கு கிடைத்தது.

மகாராஷ்டிராவில் 288-ல் 260 தொகுதிகளில் போட்டியிட்ட பிஎஸ்பி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இங்கு இக்கட்சிக்கு வெறும் 2.2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு பிஎஸ்பிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டசபை தேர்தல் வர உள்ளதால் கால அவகாசம் வழங்குமாறு அக்கட்சி கோரியிருந்தது.

இந்நிலையில், தேசிய கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் சமீபத் தில் நடைபெற்ற சட்டசபை தேர்த லில் அக்கட்சி 2 தொகுதிகளில் வெற்ற பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்