முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் எபோலா நோய் ஒழிக்கப்பட்டது: ஐ.நா.

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், அக்.22 - நைஜீரியாவில் கடந்த 42 நாட்களில் எபோலா நோய் கண்டறியப்படவில்லை என்பதால், அங்கு எபோலா நோய் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 20 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நோயை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அங்கு கடந்த 42 நாட்களில் புதிதாக எபோலா இருப்பதாக எவரும் கண்டறியப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, எபோலா பாதிப்பு அங்கு குறைந்ததாகவும், தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற்றதில் நைஜீரியாவில் எபோலா இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்