முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

தஞ்சை, அக் 24 - டெல்டா மாவட்டங்களில் ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் மழை சிறிது வெறித்து இருந்தது. நேற்று முன்தினம் மாலை சில இடங்களில் மழை பெய்தது. தஞ்சையில் நேற்றுமுன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று காலையும் மழை தூறிக் கொண்டே இருந்தது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய பகுதிகளிலும் நேற்று மழை நீடித்தது. பூகலூர் திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளமென மழை நீர் ஓடியது. பூதலூர் ரயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதே போல் திருவாரூர், நாகை மாவட்டத்திலும் நேற்று மழை பெய்தது. மழைக்கு திருவாரூ ர் மாவட்டம் நன்னலம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் சேதம் அடையும் நிலையில் உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி, வேதாரண்யம் பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யத்தில் 11.2 மி.மீட்டரும், தலைஞாயிறில் 20 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்