முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் இன்று கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, அக் 24 - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்புகட்டுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 29ம் தேதி நடைபெறுகிறது.

பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கி 7 நாட்கள் நடைபெறும். முதல் நாளன்று உச்சிகாலத்தில் மூலவர், சின்னக்குமாரர் சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், நவவீரர்கள், தீபஸதம்பம் ஆகியோருக்கு காப்பு கட்டப்படும். இதனையடுத்து சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்குவார்கள். இன்று மாலை 5 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பட்டு நின்ற விநாயகர் சன்னதியை அடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

காலை 6 மணிக்கு சண்முகர் தீபாராதனை, 6.45 மணிக்கு நின்ற விநாயகர் சன்னதியில் தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். விழாவையொட்டி தினமும் காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6.15 மணிக்கு விளாபூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை கல்ப பூஜை நடைபெறும்,

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 29ம் தேதி மாலை நடைபெறும். 30ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி, மாலை 5.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்