முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்பிரமணிய சாமிக்கு தடைவிதிக்க ஈஸ்வரன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 24 – சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழின துரோகி சுப்பிரமணிய சாமி சிங்கள பேரினவாத அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் ஒட்டி உறவாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக நலன்களுக்கு எதிராகவே உள்ளன.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பறிமுதல் செய்யச் சொன்னேன் என்று கூறினார். இப்போது இலங்கையில் தமிழர்ளை கொன்று குவித்தற்காக ராஜபக்ஷேவுக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது உச்சக்கட்டம் இதனை பொறுத்துக் கொள்ளமுடியாது.

மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அது பலனளித்து விடக் கூடாது என்பதற்காக சுப்பிரமணியசாமி செயல்பட்டு வருகிறார்.

சுப்பிரமணியசாமி தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதன் மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தலைமையின் முயற்சிக்கு முட்டுக்கட்டையே ஏற்படுகிறது.

தமிழர்களுக்கு எதிராகவும் தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியசாமியை தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். அரசு இதனை செய்யா விட்டால் மக்களே இதனை செய்வார்கள் என்று எச்சரிக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago