முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40.6 டன் டயர்-13 டன் தேவையற்ற பொருள்கள் அகற்றம்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 24 - மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி ஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சென்னையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் தற்போதைய சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. · மண்டலம் 1 முதல் 15 வரையிலும் 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதற்காக ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் 76 மருத்துவர்களும், 196 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி உத்தவு அளிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது குடிசைப்பகுதிகளில் 35 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2848 பேர்கள் பயனடைந்துள்ளனர். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.· மழைக்கால நிவாரண மையங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பிற்காக 24 மணிநேரமும் சுகாதார ஆய்வாளர்களும் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டு வருகின்றனர்.· மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவு நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு போன்ற இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.· சென்னை மாநகராட்சி, சென்னையில் வழங்கப்படும் நீரின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது குடிநீர் குழாய்கள், லாரிகள் மற்றும் குடிநீர் வாரிய தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீர் தரம் சுகாதார ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் நோய்கிருமி இல்லாததை உறுதி செய்யும் இருப்பு குளோரின் அளவு (சுநளனைரயட உhடடிசiநே) ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பு குளோரின் இல்லாத இடங்களில் வீடுதோறும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், இதுகுறித்த விவரங்கள் குடிநீர் வாரியத்திடம் அளிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யப்படுகிறது.

· தொற்றுநோய் மருத்துவமனையில் வயிற்றுப்போக்கிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் அனைத்து விவரங்களும் சேகரிப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்கு அளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது.

· போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகளும் குளோரின் மாத்திரைகளும் வட்டங்களிலும் பண்டக சாலைகளிலும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. ஓவ்வொரு மண்டலத்திலும் இரண்டு மாதத்திற்கு தேவையான கிருமி நாசினி மற்றும் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. · மழைக்காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்க பொதுமக்களிடையே சுவரொட்டிகள் கைப்பிரதிகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

· அனைத்து மண்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணி அந்தந்த கோட்டகளில் நடைபெற்று வருகின்றது.

· கொசுக்கள் கட்டுப்பாடு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காhக 3520 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கொண்டு கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களை குறைக்கும் (ளுடிரசஉந சுநனரஉவiடிn) பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

· அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு தேங்கியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் படுகைகளில் கொசுப்புழு மருந்து தெளிக்கப்பட்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

· வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்த வீடுவீடாகவும், மழைநீர் வடிகால்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் 435 கைகளால் எடுத்து செல்லும் புகை பரப்பிகளாலும் 42 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைபரப்பிகளாலும் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

· அனைத்து மண்டலங்களிலும் மலேரியா பணியாளர்களை கொண்டு கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ள சுமார் 40.6 டன் டயர்கள் மற்றும் 13 டன் தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்