முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கடந்த ஆண்டில் 2,400 பேருக்கு மரண தண்டனை

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜீங், அக்.24 - சீனாவில் கடந்த ஆண்டு, தீவிரவாதச் செயல் உள்பட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான துய் ஹுவா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளில் மொத்தம் 778 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவரங்கள் தொடர்பாக சீனா ரகசியம் காத்து வருவதால், அது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், எங்களின் முயற்சியால், மரண தண்டனை குறித்த விவரங்களை சீனாவைச் சேர்ந்த நீதித்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து பெற்றுள்ளோம். சீனாவில் 2013-ம் ஆண்டு மட்டும் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2012-ம் ஆண்டை விட 20 சதவீதம் குறைவாகும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆண்டுதோறும் சீனாவில்தான் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அந்நாட்டில் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தான் நீதித் துறையை கட்டுப்படுத்துகிறது. அந்நாட்டில் 2007-ம் ஆண்டி லிருந்து விசாரணை நீதிமன்றங் களின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து, இறுதி முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்கும் வகையி லான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதனால், மரண தண்டனைக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. சீனாவில் கடந்த 2002-ம் ஆண்டு 12 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்