முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு பேருதவி தேவை: தேசிய மாநாட்டு கட்சி

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், அக் 25 - காஷ்மீருக்கு மிக பெரிய அளவில் பிரதமர் மோடி நிதியுதவி அளிப்பார் என்று மாநில மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெள்ள நிவாரணத்துக்கு அவர் அறிவித்துள்ள வெறும் ரூ. 745 கோடி நிதியுதவி என்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சி கூறியுள்ளது. வெறும் ரூ. 745 கோடி நிதியுதவி என்று மோடி அறிவித்திருப்பது நகைச்சுவை போல உள்ளது என்று காங்கிரசும் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

காஷ்மீருக்கு மோடி வருவதற்கு முன்பு முதல்வர் உமர் அப்துல்லாவை காஷ்மீர் மக்கள் விமர்சித்த வண்ணம் இருந்தனர். காஷ்மீர் நிவாரண பணிகளில் உமர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், மோடி வந்து பெரிய அளவி்ல் உதவி செய்வார் என்றும் அவர்கள் பேசி கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மோடியின் வருகைக்கு பிறகு தாங்கள் தவறாக விமர்சனம் செய்து விட்டதாக உணர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ கூறுகையில்,

காஷ்மீருக்கான மத்திய அரசின் நிதியுதவி மிகவும் சொற்பமானது. இது காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் உதவியாக இருக்கும். தேர்தலை மனதில் கொண்டே மோடி காஷ்மீருக்கு தற்போது சென்றார். மோடியின் காஷ்மீர் பயணம் அவரது கட்சிக்குத்தான் உதவுமே தவிர காஷ்மீர் மக்களுக்கு அல்ல. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அரசியல் விளையாட்டை நடத்துவது நியாயமானதல்ல என்று சாக்கோ கூறினார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், பனிக்காலம் தொடங்குவதற்குள் காஷ்மீர் மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதை மனதில் கொண்டுதான் மத்திய அரசிடம் ரூ. 44,000 கோடி நிதியுதவி வழங்கும்படி மாநில அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை வைத்துத்தான் காஷ்மீரை சீரமைக்க முடியும் என்று உமர் அப்துல்லா கூறினார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, வாக்குகளை குறி வைத்து காஷ்மீருக்கு மோடி செல்லவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்