முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தம்பியின் வற்புறுத்தலால் சரணடைந்த பெண் நக்ஸலைட்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், அக் 25 - சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட பெண் நக்ஸல் இயக்க தலைவரான சாந்தி குஞ்சம் தனது தம்பியின் வற்புறுத்தலால் போலீசாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில்,

பீஜப்பூர் மாவட்டத்தில் கடந்த 2005ம் ஆண்டில் சல்வா ஜூ டும் என்ற நக்ஸல்களுக்கு எதிரான இயக்கத்தினரின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. அப்போது அந்த மாவட்டத்தின் கோடோலி கிராமத்தை சேர்ந்த சாந்தியை அவரது குடும்பத்தில் இருந்து நக்ஸல்கள் பிரித்து தங்களுடன் அழைத்து சென்றனர். பின்னர் நக்ஸல் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சாந்தி இறுதியாக பஸ்தர் பகுதியில் செயல்பட்டு வந்த மிர்தூர் நக்ஸல் அமைப்புக்கு தலைமை வகித்து வந்தார். பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சாந்தியை அவரது தம்பியும், மாநில போலீஸ் அதிகாரியுமான அனில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையுமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து பஸ்தர் பகுதி காவல்துறை ஆணையர் எஸ்.ஆர்.பி. கல்லூரி முன்பு சாந்தி சரணடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago