முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் இஸ்ரேல் பயணம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜெருசலேம், அக் 25 - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டெல்லியில் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் இஸ்ரேலில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் நவம்பர் 6ம் தேதி அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தலைவர்களும் இரு நாட்டு உறவு குறித்து விரிவாக பேச்சு நடத்துவார்கள். மேலும் இரு நாடுகளிடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்நாத்சிங்கின் பயணத்தில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்