முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள்: சந்திரபாபு நாயுடு

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராதாத், அக்.25 - ஹுத் ஹுத்’ புயல் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

புயலால் பாதிப்படைந்த விசாகப்பட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். அப்போது, ஸ்ரீகாகுளம் மாவட்டம், குந்துவானி பேட்டா கிராமத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

புயலால் கடலோர ஆந்திரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளன. மக்கள் விழிப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டதால்தான் புயலை நாம் சமாளிக்க முடிந்தது. புயல்காரணமாக 3 மாவட்டங்களில் 41 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் முற்றிலுமாக வீடிழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் விரைவில் இலவசமாக கட்டித்தரப்படும்.

சேதமடைந்த கிராமங்கள் ஸ்மார்ட் கிராமங்களாக உருவாக்கப்படும். மீனவர்களுக்கு 50 வயதிலிருந்தே முதியோர் உதவி தொகை வழங்கப்படும். கால்வாய், மின்சாரம் போன்றவை புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்