முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா - தெலுங்கானா இடையே மின்சாரத்தால் தகராறு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக்.26 - தெலுங்கானாவுக்கு மின்சாரம் தர ஆந்திர மாநிலம் மறுத்து வருதாக நாயுடு மீது சந்திர சேகரராவ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது, ஆந்திர மறு சீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கானாவுக்கு ஆந்திரமாநிலம் தர வேண்டிய மின்சாரத்தை தர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மறுத்து வருகிறார். இதனால் தெலுங்கானா சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய சூழ்நிலையுள்ளது.

தெலுங்கானாவில் நிலவி வரும் கடுமையான மின் தட்டுபாட்டிற்கு ஆந்திர அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசின் புகழை கெடுப்பதற்காக ஆந்திர முதல்வர் திட்டமிட்டு இதுபோல் செயல்பட்டு வருகிறார். அவர் தெலுங்கானா அரசையும் மக்களையும் ஏமாற்றி வருகிறார். இவ்வாறு சந்திரசேகரராவ் கடுமையாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், டி.ஆர்.எஸ் அரசுக்கு மின் நிர்வாகத்தை முறையாக கையாள தெரியவில்லை. அதனை விடுத்து எங்களை திருடர்கள் போல் சித்தரிக்கிறார். நாங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம். இந்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்தார்.

ஆந்திர மறு சீரமைப்பு சட்டத்தில் 53.89 சதவீத மின்சாரத்தை தெலுங்கானாவுக்கு வழங்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஆந்திர அரசு அந்த விதிகளை மதிக்காமல் நடந்து வருகிறது என்று சந்திர சேகரராவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் சந்திரசகேரராவ் கோரிக்கை விடுத்துள்ளார். மின்சார பதிவு விஷயத்தில் இரு மாநில முதல்வர்கள் மத்தியில் எழுந்துள்ள அறிக்கை போர் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்