முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக்.26 - ஆந்திர சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திராவில் கடந்த மே மாதம் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷோபா நாகிரெட்டி அல்லகட்டா தொகுதியில் போட்டியிட்டார். வாக்குபதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த தொகுதிக்கு நவம்பர் 8ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் ஒய்எஸ்ஆர் சார்பில் காலமான ஷோபா நாகிரெட்டியின் மகள் அகிலா பிரியா போட்டியிட்டார். இவரை எதிர்த்து வேறு கட்சி வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மனுதாக்கல் செய்திருந்த இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும் மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று முன்தினம் மனுவை வாபஸ் பெற்று போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.

இதனையடுத்து அகிலா பிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் அறிவித்தார். இருந்த போதிலும் முறையான நடைமுறைகளுக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் அதிகாரி தெரிவித்தார். ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் வேண்டுகோலின் பேரில் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்