முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.26 - 2015-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்காக, பெயர் சேர்ப்பது மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கு நாளை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1.1.15 தேதியன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 44 ஆயிரத்து 513 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 24 ஆயிரத்து 182 விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்காக 26-ந் தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. பெரும்பாலும் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடத்தப்படும். இங்கு விண்ணப்பங்களை வாங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், மாற்றம் போன்றவற்றுக்காக நிரப்பி அளிக்கவேண்டும்.

காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும் விண்ணப்பங்களை வாங்கும் அதிகாரிகள் இருப்பார்கள். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், இந்த முகாம் தொடர்பாக எழும் சந்தேகங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் கேட்டுத்தெளிவு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago