முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடற்கரையை சுத்தம் செய்த சசிதரூர்: காங்., அதிருப்தி

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக்.26 - பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்ததற்காக சசி தரூர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் மீண்டும் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளார். .

இது குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, "கோவலம் கடற்கரை குப்பைகள் குவிந்து நாசமடைந்துள்ளது. அதனை 25-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து சுத்தம் செய்ய உள்ளேன்" என்று தெரிவித்திருந்தார். அதன்படி அவர் நேற்று அந்த கடற்கரை பகுதியை சுத்தம் செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த 'தூய்மையான இந்தியா' திட்டத்தில் பங்கேற்ற சசி தரூர் தொடர்ந்து மோடியின் பல்வேறு நடவடிக்கைகளைத் பாராட்டி வருகிறார். இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிப் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சி மேலிடத்திற்கு கேரள காங்கிரஸ் பரிந்துரை செய்தது.

இதனை அடுத்து அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் சசி தரூர் தற்போது மீண்டும் தூய்மை இந்தியா திட்டத்துகாக கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்