முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் 5-ஆம் தேதி தெலுங்கானா பட்ஜெட் கூட்டத் தொடர்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், அக்.26 - புதிதாக உருவான தெலங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நவம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தெலங்கானா பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒப்புதல் அளித்தது. இதன்படி கடந்த ஜூன் 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் உருவானது. அங்கு தற்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 5-ம் தேதி கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் மாநில நிதி அமைச்சர் ஈடல ராஜேந்தர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மறுநாள் 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை. இந்த கூட்டத் தொடர் நவம்பர் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago