முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதின் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் சர்ச்சை

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

நாக்பூர், அக்.26 - மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோகன் பகவத்தைச் சந்திக்க தனது வெள்ளை ஸ்கூட்டரில் வந்த மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி விதிமுறைகளுக்குப் புறம்பாக ஹெல்மெட் அணியாமல் வந்தது டிவி காமிராக்களில் பதிவானது.
இது குறித்து அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் சாலைவிதிமுறைகளை போக்குவரத்து அமைச்சரே மீறியுள்ளது பற்றி சுட்டிக்காட்டியதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் அலுவலகம் உள்ளே சென்றார். டிவி சானல்களும் இதனை ஒளிபரப்ப நிதின் கட்கரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் கூறும்போது, "இது அந்தக் கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் அணுகுமுறையை அறிவுறுத்துகிறது" என்று சாடினார்.
ஏற்கனவே கடந்த டிசம்பரில் நிதின் கட்கரி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றதை டிவி சானல் ஒன்று காண்பித்தது. ஆனால் அப்போது அவர் மத்திய அமைச்சராக இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்