முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக வாகனத்திற்கு தங்கமுலாம் பூசும் பணி தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, அக் 27 - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடக்கும். அப்போது தினமும் காலை மற்றும் இரவில் சாமி வீதியுலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா நடக்கும். 2வது நாள் காலையில் சந்திரசேகரர் வீதியுலா வரும் சூரியபிறை வாகனத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்க முலாம் பூசப்பட்டது. அதே போன்று தற்போது 4வது நாள் காலையில் சந்திரசேகரர் வீதியுலா வரும் நாகவாகனத்திற்கும் தங்க முலாம் பூசப்படுகிறது. அடுத்த மாதம் 2 6ம் தேதி அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கும். இதற்கான பந்தக்கால் நடப்பட்டு தீப திருவிழாவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வரும் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு பல்வேறு வகையில் நன்கொடை செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு 4ம் நாள் திருவிழாவின் போது காலையில் சந்திரசேகரர் வீதியுலா வரும் நாக வாகனத்திற்கு தங்க முலாம் பூசி கொடுக்க பக்தர்கள் முன்வந்துள்ளனர். ரூ. 4.5 லட்சத்தில் நாகவாகனத்திற்கு தங்க முலாம் பூசப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்