முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு சென்றவர்கள் திரும்ப கூடுதல் சிறப்பு பஸ்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 27 – தீபாவளி பண்டிகைக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 17–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை சென்னையில் இருந்து 4,753 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது.

இதே போல் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய இடங்களில் இருந்து 4,335 சிறப்பு பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன.

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 17–ந்தேதியில் இருந்து 22–ந்தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே விடிய விடிய முகாமிட்டு பயணிகளுக்கு தேவையான வசதிகளை முன்னின்று செய்து கொடுத்தார். அவருடன் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் பொது மேலாளர்கள், ஊழியர்கள் என 500 பேர் பணியாற்றினார்கள்.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு பஸ்கள் எங்கெங்கு நிற்கும், முன்பதிவு செய்யாமல் வரும் பயணிகளுக்கு பஸ்கள் எங்கெங்கு நிற்கும் என்ற விவரத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருந்ததால் மக்கள் எளிதில் பயணம் செய்ய முடிந்தது.

அதிலும் குறிப்பாக முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி, அதில் பஸ் செல்லும் ஊர், தடம் எண், புறப்படும் நேரம், இருக்கை எண் ஆகியவற்றை எழுதி கொடுத்ததால் பயணிகள் சிரமம் இன்றி பஸ்சில் ஏறி அமர முடிந்தது.

பஸ்சில் துண்டு போட்டு சீட் பிடிப்பது, முண்டியடித்து பஸ்சில் ஏற முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் இதனால் நடைபெறவில்லை. டோக்கன் முறையால் இது தவிர்க்கப்பட்டது. இந்த புதிய அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

இதுபற்றி பயணிகள் கூறுகையில் கடந்த கால தி.மு.க. ஆட்சியில் இப்படி சிறப்பு பஸ்கள் விடப்பட்டது கிடையாது என்றும், அமைச்சர், அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டு பயணிகளுக்கு இப்படி உதவியது கிடையாது என்றும் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து சிறப்பு பஸ்களை இயக்கி பயணிகளுக்கு உதவினார்கள் என்றும் பாராட்டினார்கள். இந்த ஆண்டு ஆன்–லைன் மூலம் 2.15 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்பதிவு செய்யாதவர்கள் 21–ந்தேதி வரை 1 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பண்டிகை முடிந்து அவரவர் நகரங்களுக்கு பயணிகள் திரும்பிய வண்ணம் உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் 22–ந்தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்னை திரும்ப உள்ளதால் அதற்கேற்ப போதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும், கோவை, தஞ்சை, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago