முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினை: பாக்., பிரதமரின் ஆலோசகர் பேட்டி

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.28 - காஷ்மீர் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தன்னிச் சையாக முடிவு எடுக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:

காஷ்மீர் பிர்ச்சினைக்கு தன்னிச்சையாக தீர்வு காண இந்திய அரசு விரும்புகிறது. ஆனால் இந்த முயற்சி வெற்றியடைய அனு மதிக்க மாட்டோம். இந்தியா-பாகிஸ் தான் இடையிலான எல்லைக்கட்டுப் பாட்டுக் கோடு பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீர் மக்களை அச்சுறுத்து வதற்காக இந்திய அரசு சுமார் 7 லட்சம் வீரர்களை அங்கு பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த நாடு மனித உரிமையை மீறி செயல்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி யில் இந்திய வீரர்கள் மேற்கொள் ளும் அடாவடி நடவடிக்கை மற்றும் காஷ்மீரில் மனித உரிமை மீறப் படுவது குறித்து எடுத்துரைப்பதற் காக பல்வேறு நாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப அரசு திட்ட மிட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்