முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பணம் பதுக்கிய 3 பேர் குறித்து அறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.28 - கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிய மூன்று இந்திய தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

டாபர் குரூப் இயக்குனராக இருந்த பிரதீப் பர்மன், கோவாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலதிபர் ராதா எஸ். டிம்ப்ளோ, பங்கு வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோதியா ஆகிய மூவரது பெயரும் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசு தரப்பில், "வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வரி ஏய்ப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அதேவேளையில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் அனைவரும் கருப்புப் பணத்தையே வைத்துள்ளனர் என முடிவுக்கு வரமுடியாது. தவறிழைத்ததற்கான முதல்கட்ட ஆதாரம் இல்லாமல் பெயர்களை அரசு வெளியிடாது" என தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை விசாரித்து வரும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிலரின் வங்கிக் கணக்குகள் குறித்து தகவல்களை தெரிவிக்க தயாராக இருப்பதாக ஸ்விட்சர்லாந்து அரசு கூறியிருப்பதையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்