முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி சிறப்பு பஸ் மூலம் ரூ.8 கோடியே 35 லட்சம் வசூல்

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 28– 
தீபாவளி பண்டிகைக்காக கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதை போன்று இந்த ஆண்டும் அவரது வழிகாட்டுதலின் பேரில் 9088 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
இதில் கடந்த 17–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை சென்னையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 4753 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய இடங்களில் இருந்து 17–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை 4,335 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பஸ்கள் 22–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை இயக்கப்பட்டது. இதில் ஆன்லைன் மூலம் மட்டும் 2 லட்சத்து 61 ஆயிரத்து 994 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். 
அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை 2011–ம் ஆண்டு அக்டோபர் 3–ந்தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் நிறைய பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். 
2011–ம் ஆண்டு தீபாவளி சிறப்பு பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 285 பேர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இதன் மூலம் டிக்கெட் வருமானம் ரூ. 3 கோடியே 39 லட்சம் கிடைத்தது. 
2012–ம் ஆண்டு ஆன் லைன் புக்கிங் மூலம் தீபாவளி சிறப்பு பஸ்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 299 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதன் மூலம் டிக்கெட் வசூல் ரூ.6 கோடியே 3 லட்சம் அரசுக்கு கிடைத்தது. 
கடந்த 2013–ம் ஆண்டு தீபாவளி சிறப்பு பஸ்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 719 பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்திருந்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 7 கோடியே 1 லட்சம் வருமானம் கிடைத்தது. 
இந்த ஆண்டு விடப்பட்ட தீபாவளி சிறப்பு பஸ்களில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 994 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் டிக்கெட் வசூல் ரூ.8 கோடியே 35 லட்சத்து 98 ஆயிரம் அரசுக்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா
அறிமுகப்படுத்திய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பஸ் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர். 

சிறப்பு பஸ்சில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த கால தி.மு.க. ஆட்சியில் தீபாவளிக்காக இப்படி சிறப்பு பஸ்கள் விடப்பட்டது கிடையாது என்றும் அமைச்சர், அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டு பயணிகளுக்கு இப்படி உதவியது கிடையாது என்றும் கூறினார். 

அ.தி.மு.க. ஆட்சியில் கோயம்பேட்டில் மக்களோடு மக்களாக அமைச்சர் – அதிகாரிகள் அனைவரும் இணைந்து சிறப்பு பஸ்களை இயக்கி, பயணிகளுக்கு உதவியதை எல்லோரும் பாராட்டுகின்றனர்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்