முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.51.35 கோடி ஊக்கத்தொகை

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக். 28-பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, உபரி வருமானம் ஈட்டிய

2,44,519 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.51.35 கோடி ஊக்கத்தொகையாக வழங்க அமைச்சர் பி. வி ரமணா அறி விள்ளார் .         இது குறித்து   தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பால்வளத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர்  பி. வி ரமணா  தலைமையில் நேற்று ( 27.10.14  அன்று)  காலை  தலைமைச் செயலகத்தில்  பால் கொள்முதல், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது சம்பந்தமாக மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

  இந்த  கூட்டத்திற்கு ஆவின் சென்னை இணையத்தின் தலைவர் அ. மில்லர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர்
 முனைவர் ச. விஜயகுமார்,, பால் வளத் துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர்  சுனீல் பாலீவால். ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பி. வி ரமணா  கூறியதாவது:

பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  கடந்த  10 மாதங்களில் பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 8-ம், எருமைப்பாலுக்கு ரூபாய் 7-ம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வினால் தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும் 22.50 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். அரசின் அறிவிப்புக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கொள்முதல் விலை உயர்வைத் தவிர தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, உபரி வருமானம் ஈட்டிய சேலம், மதுரை, கோயம்புத்துhர், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 2,44,519 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.51.35 கோடி ஊக்கத்தொகையாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென்று அமைச்சர் கூறினார்..

 

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, உயர்ந்துள்ள பால் உற்பத்தி செலவினங்களை கருத்தில் கொண்டும், பால்  கொள்முதல் விலை உயர்த்தி அரசு வழங்கியுள்ளது. இந்த விலை உயர்வு பற்றிய தகவல்கள்  குறித்து  களப்பணியாளர்கள், பால்  உற்பத்தியாளர்களுக்கு தெரிவித்து அவர்களை கூட்டுறவு சங்கங்களுக்கு அதிக அளவில் பால் வழங்க அறிவுறுத்த வேண்டும்.     மேலும்,  மாவட்ட பால் உற்பத்தியளார்கள் ஒன்றியங்கள் தங்களுக்கு பால் கொள்முதல் இலக்கை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். 

 மேலும், பால் கூட்டுறவுகளின் அடிப்படை அமைப்பான தொடக்க பால் உற்பத்தியளர்கள் கூட்டுறவு சங்கங்களை  வலுப்படுத்தும் விதமாக  மிகுதியான பால் உற்பத்தியாளர்களை கூட்டுறவு அமைப்பின் கீழ் சேர்க்கவும், புதிய சங்கங்கள் அமைக்கவும்,  செயலற்ற சங்கங்களை  புனரமைக்கவும், தமிழகத்தை பால் உற்பத்தியில் முன்னிலை மாநிலமாக திகழச்செய்யவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தவும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

 

            இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் ஆவின் இணையத்தின் துணைத்தலைவர்
 கே.சி.தங்கரராஜன் அனனத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் தலைவர்கள்,  ஆவின் இணை நிர்வாக இயக்குனர் ஆர்.கஜலட்சுமி,, துணைப் பால் ஆணையர் எஸ்.துரைசாமி, பொது மேலாளர் (நிர்வாகம்) பி. பிரபாகர், பொது மேலாளர் (திட்டம் /பொறி) சி.லோகிதாஸ், பொது மேலாளர் (நிதி) சி. ரவி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்