முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலோஃபர் புயல்: பாக்.,கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.29 - அரபிக்கடலில் உருவாகி உள்ள 'நிலோஃபர்' பாகிஸ்தானின் கராச்சி நகரை தாக்கக்கூடும் என்பதால் அங்கு உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள 'நிலோஃபர்' புயல் தென் கடலோர பகுதிகளில் வலுவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்த புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. நிலோபர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வரும் 31-ம் தேதி குஜராத்தின் வடக்கு கடற்கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மும்பைக்கு மேற்கு - தென்மேற்கு திசையிலிருந்து கராச்சி நகரை நோக்கி 1,100 கி.மீ தூரத்தில் வலுபெற்றுள்ளது. 'நிலோஃபர்' புயல் கரையைக் கடக்கும்போது, கட்ச் உள்ளிட்ட குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பாகிஸ்தானின் கராச்சி நகரையும் இந்த புயல் தாக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குஜராத் மாநிலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago