முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதுமை ஏற்றுமதி: பாக்.,கிடம் அனுமதி கோரும் இந்தியா

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.29 - பாகிஸ்தான் நிலப்பகுதி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி கோரி உள்ளது. இதற்கு பாகிஸ்தானின் மாவு மில் உரிமையாளர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் டன் கோதுமையை ஆப்கனுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் நிலப்பகுதி வழியாக கோதுமையை அனுப்பி வைக்க அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரி உள்ளது. இந்நிலையில் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசுக்கு உள்ளூர் கோதுமை மாவு மில் உரிமை யாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலி ருந்து இறக்குமதியாகும் 1 டன் கோதுமை விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.2,900 ஆக இருக்கிறது. அதேநேரம் பாகிஸ்தான் கோதுமை விலை ரூ.3,400 ஆக உள்ளது.

இந்த விலை வித்தியாசம் காரணமாக, பாகிஸ்தானிலிருந்து ஆப்கனுக்கு ஏற்றுமதியாகும் கோதுமை மாவுக்கான சந்தை பாதிக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, பாகிஸ்தான் வழியாக கோதுமை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி வழங்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago