முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை போக்குவரத்து மசோதாவை தமிழகம் ஆதரிக்காது

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 30 - மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு தயாரித்துளள சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகிய இரு அமைப்புகளின் கூட்டு கூ ட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது,

சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. ஆனால் அடிப்படையிலேயே இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மசோதாவின்படி மோட்டார் வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தன்னிச்சை அதிகாரம் படைத்த தேசிய ஆணையத்தை அமைத்தால் அதன் பிறகு வாகன போக்குவரத்து ஒழுங்குமுறை விவ காரத்தில் மத்திய, மாநில அரசுகளால் தலையிட முடியாத நிலை ஏற்படும். அரசின் கொள்கைகளையும், நேரடியாக நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகும்.

தற்போது அமலில் உள்ள மோட்டார் வாகன சட்டப்படி வாகன போக்குவரத்து துறையை அமைக்கவும் ,அதற்கு அதிகாரிகளை நியமிக்கவும் மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொது போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத்தையும் மாநில அரசே அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு உத்தேசித்துள்ள வரைவு மசோதாவில் இந்த அதிகாரகங்கள் அனைத்தும் தேசிய ஆணையத்திடம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம், வாகன தகுதி சான்றிதழ் போன்றவற்றை சோதனையிடும் நடவடிக்கையை தனியார் மூலம் மேற்கொள்ள மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றின் அதிகாரத்தை பறிக்கவோ, ஒழுங்குமுறை செய்யவோ உருவாக்கப்படும் அமைப்பாக விளங்க கூடாது. இதை ஒருபோதும் தமிழகம் ஆதரிக்காது. அதே சமயம் விபத்து காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு முழுமையான இலவச சிகிச்சை, மருத்துவ வசதிகள், அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் கட்டாய காப்பீடு போன்ற வசதிகள் இடம் பெற்றிருப்பதை தமிழகம் வரவேற்கிறது. மேலும் வரைவு மசோதாவில் விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிக்கு தண்டனை, அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை இந்திய தண்டனை சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் எடுக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளதிலும் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே இந்த வரைவு மசோதாவில் இடம் பெற்றுளள சட்டப் பிரிவுகளின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக மறு ஆய்வு செய்து திருத்தி அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழகத்தின் நிலையை ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago