முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க கலவர பகுதிகளை மத்திய குழு இன்று பார்வை

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, அக் 30 - மேற்கு வங்கத்தில் 3 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான கலவர பகுதிகளை பாஜக மத்திய குழு இன்று பார்வையிடுகிறது.

மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாபட்டத்தில் மக்ரா கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்களிடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 5 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கலவரம் பரவாமல் தடுக்க ஏராளமான போலீசார் ரோந்து சுறறி வருகின்றனர். இந்த நிலையில் கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்ரா கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பாஜகவை சேர்ந்த தொண்டர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்ரா கிராமத்தில் பாஜக ஆதரவாளர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். ஆகவே பாஜக மத்திய குழு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறது. இக்குழு கலவரம் நடந்த பகுதிகள் குறித்த முழு அறிக்கையை பாஜக தலைமையிடமும் மத்திய அரசிடமும் தாக்கல் செய்யும். கலவரத்தில் கொலையுண்டவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும். கலவரம் குறித்த அறிக்கை எனக்கு கிடைத்ததும் உடனடியாக நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் இது குறித்து பேசுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்