முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநள்ளாறு கோயிலில் டிச.16ல் சனிப்பெயர்ச்சி விழா

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

காரைக்கால், அக் 30 - புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த தலமானது உலகளவில் சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த கோவிலில் சனி பெயர்ச்சி விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி வரும் மார்கழி மாதம் 1ம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நவம்பர் 2ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறுவதாக ஜோதிடர்கள் அறிவித்துள்ளனர். திருநள்ளாறில் வாக்கி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் 1 6ம் தேதி அன்றுதான் திருநள்ளாறில் சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. மேலும் இங்கு சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவதால் பகவானுக்கு அர்ச்சனை செய்யும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து செல்லலாம். அது போன்று இந்த கோவிலுக்குவந்து விட்டு மற்ற கோவில்களுக்கும் பக்தர்கள் செல்லலாம். சனி பெயர்ச்சி விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகமும் செய்து வருகின்றன. இந்த தகவலை கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago