முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.,- தே.காங்., எம்.எல்.ஏ.க்கள் பாஜ.வில் சேர திட்டம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக் 30 - காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 27 பேர் பாரதீய ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மராட்டியத்தில் பா.ஜனதா தனித்து ஆட்சி அமைக்க இன்னும் 23 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. பா.ஜனதாவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஒரு வேளை சிவசேனா நிபந்தனை விதித்தால் அதை பா. ஜனதா ஏற்க முடியாத பட்சத்தில் தனித்து ஆட்சி அமைக்கவும் தயாராகி வருகிறது. ஏற்கனவே 14 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டது. அது ப ற்றிய விவரங்களை பா.ஜனதா அதிகாரபூர்வமாக வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. சிவசேனா நிபந்தனை விதிப்பதை சமாளிக்கவே சுயேட்சைகளிடம் ரகசிய பேச்சு நடத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 27 எம்எல்ஏக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுதிர் முங்கட்டிவார் என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையி்ல், மராட்டியத்தில் தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலை உருவாகி உள்ளது. பிரதமர் மோடி மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜனதாவுக்கு மற்ற கட்சிகளிடம் இருந்து ஆதரவு வந்தவண்ணம் உள்ளது. இதில் மேலும் விவரங்களை வெளியிட முடியாது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 27 பேர் பா.ஜனதா அரசை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே சட்டசபையில் எந்த பிரச்சினையும் இருக்காது. மெஜாரிட்டியை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 27 எம்எல்ஏக்களும் பா.ஜனதாவில் இணைவார்கள் என்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதா சார்பில் தேர்தலில் மீ ண்டும் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்