முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர், அக்.30  திருசசெந்தூர் முருகன் கோவிலில் நேற்று அரோகரா கோஷத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்-த-சஷ்டி விழா கடந்த 24&ந் தேதி யாக சாலை பூஜை-யு-டன் தொடங்-கி-யது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்-கள் காலை மற்-றும் மாலை யாக சாலை பூஜை-கள் நடந்-தன. விழா நாட்களில் தின-மும் சுவாமி ஜெயந்-தி-நா-தர், வள்ளி, தெய்-வானை அம்-பா-ளு-டன் தங்க சப்-ப-ரத்-தில் சண்-முக விசால மண்-ட-பத்-துக்கு எழுந்-த-ருளி பக்தர்க-ளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
 கந்தசஷ்டி திருவிழா-வின் முக்கிய நாளான நேற்று அதி-காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்-பட்-டது. 1.30 மணிக்கு விஸ்-வ-ரூப தீபா-ரா-தனை, 2 மணிக்கு உதய மார்த்-தாண்ட அபி-ஷே-கம், 9 மணிக்கு உச்-சி-கால அபி-ஷே-கம், தீபா-ரா-தனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி&தெய்-வானையுடன் தங்க சப்-ப-ரத்-தில் சண்-முக விசால மண்-ட-பத்-திற்கு எழுந்-த-ரு-ளி-னார். அங்கு தீபாராதனைக்கு பின் திரு-வா-வ-டு-துறை ஆதீ-னம் கந்-த-சஷ்டி மண்-ட-பத்-தில் சுவாமி, அம்-பா-ளுக்கு சிறப்பு அபி-ஷே-கம், தீபா-ரா-தனை நடந்தது.
 சிவன் கோவி-லில் இருந்து சூர-பத்-மன் முக்கிய வீதி-கள் வழி-யாக வலம் வந்து மாலை 3.45 மணிக்கு கோவில் கடற்க-ரைக்கு வந்து சேர்ந்-தான். சுவாமி ஜெயந்-தி-நா-தர் சர்வ அலங்காரங்களுடன்  கையில் வேல் ஏந்தி, சூர-பத்-மனை வதம் செய்ய மாலை 4.30 மணிக்கு கடற்கரைக்கு புறப்-பட்-டார்.
 
 முத-லில் யானைமுகன் தனது பரி-வா-ரங்க-ளு-டன், முருக பெரு-மானை நோக்கி போர்-பு-ரிய சுற்றி வந்து சுவா-மிக்கு எதிரே வந்து நின்-றான். மாலை 5.05 மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முரு-க-பெ-ரு-மான் வேல் கொண்டு வதம் செய்-தார். அதன் பிறகு சிங்-க-மு-கா-சூ-ரன், அதே-போல் முரு-கனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயா-ரா-னான். அவ-னை-யும் முரு-க பெருமான் தன் வேலால் வதம் செய்-தார்.
 பின்னர் சூர-பத்-மன் தனது படை வீரர்க-ளு-டன் வேக-மாக முருக பெரு-மா-னு-டன் போர் புரிய வந்-தான். முரு-கக் கடவுள் வேல் எடுத்து சூர-பத்-மனை சம்-ஹா-ரம் செய்-தார். அப்-போது வானத்-தில் கரு-டன் சுற்றி வட்டமிட்டது. கடற்க-ரை-யில் கூடி- இ-ருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோ-கரா கோஷம் விண்ணை பிளந்-தது. இறு-தி-யாக மாம-ர-மும், சேவ-லு-மாக உரு-மாறி வந்-த சூர-பத்-மனை முரு-கப்-பெ-ரு-மான் சேவ-லும், மயி-லு-மாக மாற்றி ஆட்-கொண்-டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

 பின்-னர் சுவாமி ஜெயந்-தி-நா-தர் கடற்க-ரை-யில் உள்ள சந்-தோஷ மண்-ட-பத்திற்கு சென்றார். அங்கு  முரு-க-னுக்கும், வள்ளி&தெய்-வா-னை- அம்பாளுக்கும் சிறப்பு பூஜை-கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்-தி-நா-தர், வள்ளி&தெய்-வா-னை-யு-டன் எழுந்-த-ருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்-பி-ர-கா-ரத்-தில் உள்ள 108 மகா தேவர் சன்-ன-திக்கு சென்-றார். பின்னர் சாயாபிஷேகம் நடந்-தது. பின்-னர் விர-தம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலை-யில் வைத்து பூஜை செய்-யப்-பட்ட தக-டு-கள் வழங்கப்பட்டன-.
 சூர-சம்-ஹா-ரம் நடந்ததும் பக்தர்கள் கட-லில் புனித நீராடி பல மணி நேரம் வரி-சை-யில் காத்துநின்று சாமி தரிசனம் செய்தனர். பல்-வேறு பகு-தி-களில் இருந்-தும் லட்-சக்க-ணக்கான பக்தர்கள் சூர-சம்-ஹா-ரத்தை காண கோவி-லுக்கு வந்து இருந்-த-னர். கந்-த-சஷ்டி விழாவை முன்-னிட்டு கோவி-லில் பக்தர்க-ளின் வச-திக்காக ஆங்-காங்கே டி.வி.க்கள் வைக்கப்-பட்டு இருந்-தன. மேலும் சூர-சம்-ஹார விழாவை கூட்ட நெரி-சல் இல்-லா-மல் பார்க்க பெரிய டிஜிட்-டல் திரை கோவில் வளா-கத்-தில் 2 இடங்க-ளில் அமைக்கப்-பட்டு இருந்-தன. வரி-சை-யில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுத்-தி-க-ரிக்கப்-பட்ட தண்-ணீர் வழங்கப்-பட்-டன. பேரூராட்சி மன்றம் சார்பில் நகரும் கழிப்பிடம் வைக்கப்பட்டிருந்தது.
 தமி-ழ-கத்-தின் பல்-வேறு பகு-தி-களில் இருந்து சிறப்பு பஸ்-கள் விடப்-பட்டு இருந்-தன. இதே-போன்று திருச்-செந்-தூ-ருக்கு சிறப்பு ரெயில் விடப்-பட்டு இருந்-தது. பக்தர்க-ளின் பாது-காப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்-பட்ட போலீ-சார் பாது-காப்பு பணி-யில் ஈடு-பட்-டு இருந்-த-னர்.

 சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பழனியப்பன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி சொக்கலிங்கம், தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிபதி ராஜசேகர், முதல்நிலை நீதிபதி பால்த்துரை, திருச்செந்தூர் குற்றவியல் நீதிபதி நம்பிராஜன், சாத்தான்குளம் உரிமையில் நீதிபதி பசும்பொன் சண்முகையா,  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயலர் பழனியப்பன், அரசு பணியாளர் தேர்வாணையத்தலைவர் பாலசுப்பிரமணியன், எம்பி சசிகலா புÔ¢பா, தகவலறியும் உரிமை ஆணையர் சரோஜா, டிஆர்ஓ முத்து, ஆர்டிஓ தியாகராஜன்¢, தாசில்தார் வெங்கடாசலம், டவுண் பஞ் தலைவர் சுரேÔ¢பாபு, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத்துணைத்தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்டதலைவர் ஹரிஹரமுத்து அய்யர், மலேசியா ரெட்சா செக்யூரிட்டி நிறுவனர் டத்தோ தவராஜா, டத்தின் ருக்மணி, ஹோட்டல் மணி அய்யர் மூர்த்தி, ரமணி, ஆனந்த், நாராயணன், தேவஸ்தான தேங்காய் பழக்கடை சங்கர சுப்பிரமணியன், ஆத்ம சைதன்ய மகராஜ்ஜீ சுவாமிகள், ஹோட்டல் அசோக்பவன் சீனி பண்ணையார், கவுன்சிலர் அரசுமீனா, மணி, ஸ்ரீமுருகன் பேட்டர் மில் மகேந்திரன், ஆறுமுகநேரி மகேÔ¢கார்மென்ட்ஸ் மகேÔ¢, சாந்தா டிஜிட்டல் தங்கவேல், சுடலை, கசமுத்து, ராஜா, பிஜேபி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமேÔ¢வரன், இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் ரவிகிருÔ¢ணன், செயலாளர் ஜவகர், ஒன்றிய பொதுச்செயலாளர் தவலிங்கம், நகர காங்கிரஸ் தலைவர் குறிஞ்சி சுரேÔ¢, வேல்குமார் கார்மெண்ட்ஸ் ராதாகிருÔ¢ணன், சிவமுருகன் லாட்ஜ் அருள், விசாகா ரெசிடென்சி ரத்தினம், விவேகா கன்ஸ்ட்ரக்Ôன் நாராயணன், வெங்கடேசன், பாரத திருமுருகன் திருச்சபை மாநில தலைவர் மோகனசுந்தரம், சாந்தி பேக்கரி ராதாகிருÔ¢ணன், ரமேÔ¢,  உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருÔ¢ணன், தமிழக கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்