முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் தொடங்க சூழல்: இந்தியாவுக்கு 142-வது இடம்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.31 - தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு இடம் குறைவு. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

‘ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டுக் கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவும் 189 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 53.97 புள்ளிகளுடன் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 52.78 புள்ளிகளுடன் 140-வது இடத்தில் இருந்தது.

இதுகுறித்து உலக வங்கி குழுமத்தின் வளர்ச்சி பொருளா தார பிரிவு இயக்குநர் அகஸ்டோ லோபஸ்-கிளாரஸ் கூறியதாவது:

கடந்த மே 31-ம் தேதி வரையிலான நிலவரத்தின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பட்டியலில் இந்தியா பின்தங்கியதற்கு மோடி தலைமையிலான அரசு காரணமல்ல. அதே நேரம் புதிய அரசு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கவும் முன்னு ரிமை கொடுத்து வருகிறது. இதன் பலன் அடுத்த ஆண்டு வெளியாகும் பட்டியலில் பிரதிபலிக்கும் என்றார்.

மற்ற சில நாடுகள் வேகமாக முன்னேறியதால் இந்தப் பட்டிய லில் இந்தியா பின்தங்கி உள்ளது. 88.27 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. நியூசி லாந்து, ஹாங்காங், டென்மார்க், தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய நாடுகள்: அமெரிக்கா(7), பிரிட்டன் (8), சீனா(90), இலங்கை(99), நேபாளம்(108), மாலத்தீவுகள் (116), பூடான்(125), பாகிஸ்தான் (128).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்