முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: தங்கச்சிமடத்தில் பதற்றம்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,அக்,31: ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த வருடம் மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை போதைப்பொருள் கடத்தி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சிறையிலிருக்கும் மீனவர்களுக்கு துக்குதண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவுயிட்டது.அதனை யொட்டி 5 மீனவர்களின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் சாலைமறியல்,கடையடைப்பு: பஸ் உடைப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சுழ்நிலைகள் ஏற்பட்டன.

.

ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த 28-11-2011 ஆம் தேதி தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த பாண்டிய மகன் கிளாட்வின் என்பவரின் படகில் மீன் பிடிக்க சென்ற தஙகச்சிமடம் அந்தோணியார்புரம் தெருவை சேர்ந்த பலவேந்திரன் மகன் அகஸ்டன்(37),குழந்தைசாமி மகன் பிரசாத்(32),ஜான்பிரிட்டோ மகன் செல்வன் லாங்லெட் லோயலோ(22), விக்டோரியாநகரை சேர்ந்த ராயப்பன் பெர்னாண்டோ மகன் வில்சன்(42),பாண்டியன் மகன் எமர்சன் (38)ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து போதைப்பொருள் கடத்திவந்ததாக வழக்கு பதிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் 2 வருடமாக வழக்கு நடந்து வந்த நிலையில் சில மாதத்தி்ற்க்கு முன்பு கொழும்பு நீதிமன்றம் எண் 2 ல் வழக்கு மாற்றப்பட்டு மீனவர்களை ஆஜர் படுத்தி பின்னர் வெளிக்கடை சிறையில் அடைத்தனர். சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ரயில் மறியல்,உண்ணாவிரதம் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.அதனையொட்டி தமிழக அரசு சிறையிலிருந்த மீனவ குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்தும்,மீனவர்களின் சார்பில் அரசு செலவில் வழக்குறைஞர்களை நியமி்த்து வழக்கில் ஆஜராகி வந்தன. இந்த நிலையில் சிறையிலிருந்த 5 மீனவர்களையும் போலீஸார் மீண்டும் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டன. வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்த இரு தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களையும் நீதிபதி பத்மசூரசேனா கவனித்து வந்தார்.அதன் பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்ட 5 மீனவர்களையும் விசாரணை செய்தார்.அதன் பின்னர் மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதி்த்து உத்தரவுயிட்டார். அதனை யொட்டி 5 மீனவர்களின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் பல் வேறு போராட்டங்கள் நடத்தி வந்ததால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளன.

தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம்: பேருந்துக்கு தீ வைப்பு

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை இலங்கை நீதிமன்றம் விதித்த தகவலறிந்த மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடம் பகுதியில் தண்டனை விதித்ததை கண்டித்து மீனவ பெண்கள் உள்பட 1500 க்கு மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டன.அதனை தொடர்ந்து பெங்களூர் பகுதியிலிருந்து ராமேசுவரம் வந்த அரசு விரைவு பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகளை உடைக்கப்பட்டன. ராமேசுவரம் பகுதி நகர் பேருந்துக்கு தீ வைத்தனர்..அதன் பின்னர் ரயில் வண்டி செல்லும் தண்டவாளங்களை சேதப்படுத்தின.இதனால் ராமேசுவரம் ரயில் நிலையத்தியிலிருந்து மாலை 5 மணி்க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் சென்னை விரைவு ரயில் வண்டியும்,6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் பயணிகள் வண்டியும்,இரவு 8 மணி்க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் சேது விரைவு ரயில் வண்டியும்,8.45 மணி்க்கு புறப்பட்டு கண்ணியாகுமாரிக்கு செல்லும் அதிவிரைவு வண்டியும் நிறுத்தப்பட்டன.அதுபோல ஓகா பகுதியிலிருந்தும்,மதுரையிலிருந்தும் ராமேசுவரம் வரும் ரயில் வண்டிகளும் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டனர். ராமேசுவர்ம நகர் பேருந்து அக்காள்மடம் பகுதியில் தீ வைத்தனர். மாலை 2 மணிக்கு மீனவர்கள் துவங்கப்பட்ட போராட்டம் இரவு 7 மணிவரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றன.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும்,பக்தர்களும் பாதிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago