முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ 1 - முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு இன்று (1.11.2014) முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

இதனால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி வட்டங்களிலுள்ள 18,090 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்