முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.01-

சவுதி அரபியாவில் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள தமிழக மீனவர்கள் 22 பேர் பத்திரமாக தாயகம் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் புதுவையைச் சேர்ந்த 6 பேர் ஆக மொத்த 22 மீனவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள ஜூபெயில் என்னும் இடத்தில் மீன் பிடித்தொழில் செயவதற்காக பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு கடுமையான பணிகள் கொடுக்கப்படுவதோடு, உடல் ரீதியாகவும் அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும், சித்தரவைகளுக்கும் ஆளாக்கப்படுவதாக தெரிகிறது.

இதை தாங்க முடியாமல் அவர்கள் நாடு திரும்ப பல முறை சமந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர். ஆனால் நிர்வாகமானது அதை கண்டுகொள்ளாமல் இருப்பதோடு பல்வேறு இன்னல்களை அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும், ஒப்பந்தப்படி அந்த 22 மீனவர்களுக்கும் சரியான படி சம்பலம் கொடுக்கப்படாததும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர்களின் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 22 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க தலையிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை விடுவித்து தாயகம் திரும்ப மத்திய அரசின் அவசியமாக தேவைப்படுகிறது. அதனால் மத்திய அரசானது சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டு அந்த 22 மீனவர்களையும் உடனடியாக தாயகத்துக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 22 மீனவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பல பாக்கியையும் வசூல் செய்து அவர்கள் கொடுப்பதோடு தாயகம் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்