முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை பாதிப்பு சீரமைப்பு பணி: அமைச்சர் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

மதுரை, நவ 1 - மதுரை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் உத்தரவின்படி மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு ,மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாடக்குளம் கண்மாய் பகுதிகளையும், மேலக்கால் சாலை பகுதியில் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளையும், சோழவந்தான் மற்றும் கருப்பட்டி ஆகிய பகுதிகளில் 5.80 கி.மீ நீளமுள்ள சாலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சாலையின் மேல்தளம் பாதிப்படைந்தது. இப்பகுதியில், தற்காலிகமாக ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும், வாடிப்பட்டி வட்டத்திலுள்ள போடிநாயக்கன்பட்டி நாச்சிக்குளம் பகுதிகளில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யப்பட்டு 15 நாட்களே ஆன நெற்பயிர்கள் மழையின் காரணமாக மழைநீர் வடியாமல், அழுகிய நிலையில் காணப்பட்ட நெற்பயிர்களையும், வாடிப்பட்டி வட்டம் நீரோத்தான் பகுதியில் தற்பொழுது பெய்த மழையின் காரணமாக துருத்தி ஓடையில் ஏற்பட்ட சிறிய உடைப்பினை சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சீர்செய்யும் பணியினையும், வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள, 1070.46 ஏக்கர் பாசனபரப்பு கொண்ட தனிச்சியம் கண்மாய்க்கு நீர்வரத்து பெரியார் கால்வாய் மூலமும் மற்றும் சிறுமலையில் உற்பத்தியாகும் நல்லதங்காள் ஓடையின் மூலமும் கிடைக்கிறது. இக்கண்மாயில் தற்பொழுது பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியதாவது,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்பொழுது, மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்த போதிலும், பெரியார் அணைப்பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் பெய்து வரும் மழையினால் வைகை அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது, விவசாய மக்களுக்கும், பொதுமக்களின் குடிநீர்; பயன்பாட்டிற்காகவும் பயன்படுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக வைகை ஆற்றிலிருந்து நிலையூர் கால்வாய் மூலமாக நீர்வரத்து மாடக்குளம் கண்மாய்க்கு வந்து கொண்டிருக்கிறது. மாடக்குளம் கண்மாயின் முழுக்கொள்ளளவு 166.9 மில்லியன் கனஅடி. தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக மாடக்குளம் கண்மாயில் 50 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. 1600 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வயல்கள் இக்கண்மாய் மூலம் பயன்பெற்று வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வருடம் தான் கண்மாயின் நீர்வரத்து 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியை சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் உயருவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. கண்மாயிலுள்ள செடிகளை அகற்றுவதற்கும், கண்மாயிற்கு வரும் நீர் தங்கு தடையின்றி வருவதற்கு கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலக்கால் சாலைப்பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக சேதமடைந்;த நெற்பயிர்களுக்கான நிவாரண உதவித்தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

வாடிப்பட்டி வட்டம் அய்யன்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மரணமடைந்த அஜுத்குமார் என்பவரின் தாயார் தமிழ்செல்வி என்பவருக்கு இயற்கை இடர்பாடு நிவாரண உதவித்தொகை ரூ.1,50,000-க்கான காசோலையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ இந்த ஆய்வின் போது வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா, மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் சாலைமுத்து, இணைஇயக்குநர் (வேளாண்மை) ஜெய்சிங்ஞானதுரை, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் (பெரியார் வைகை கோட்டம்) முத்துப்பாண்டி, உதவி செயற்பொறியாளர்கள் மொக்கைமாயன், ஜோதிபாசு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ராஜதுரை உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago