முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஒபாமா வற்புறுத்தலால் ராணுவ மந்திரி ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அதிபர் ஒபாமாவின் வற்புறுத்தலால் அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் சகஹெகல்.
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா அரசில் ராணுவ மந்திரியாக சக்ஹெகல் பவதி வகித்தார். இவர் புகழ் பெற்ற வியட்நாம் போரில் பங்கேற்றவர்.
அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ மந்திரி பதவியில் இருந்தார். இந்த நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஆன அமெரிக்க ராணுவத்தின் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சக்ஹெகல் மீது விமர்சனம் எழுந்தது.
அது ஒரு பிரச்சினையாக எழுந்தது. அதை தொடர்ந்து அவர் ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி, அவரை அதிபர் ஒபாமா வற்புறுத்தினார். அதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடிதத்தை அதிபர் ஒபாமாவும் ஏற்றுக் கொண்ட உறஉதி செய்தார்.
அதை தொடர்ந்து அடுத்த ராணுவ மந்திரி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய ராணுவ மந்திரி யார் என்பது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அப்பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 3 பேரின் பெயர்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் ராணுவ உதவி மந்திரி மைக்கெல் புளோர்நாள், ரோகித்தீவின் சென்ட்டார் ஜேக் ரீட், முன்னாள் துணை ராணுவ மந்திரி ஆஸ்தான் கார்டர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலகியுள்ள சக்ஹெகல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் அரசில் முக்கிய பதவி வகித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து