முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி நிலையத்தில் இறங்கிய முதல் பெண்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - இத்தாலியின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை சர்வதேச விண் வெளி நிலையத்தில் பத்திரமாக இறங்கினார் என்று நாசா மையம் தெரிவித் துள்ளது.
சமந்தா கிறிஸ்டோபோ ரெட்டி எனும் அந்தப் பெண், ரஷ்யாவின் ஆண்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் அமெரிக் கரான டெர்ரி விர்ட்ஸ் ஆகியோருடன் ரஷ்ய விண்கல மான சோயூஸ் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந் தார். ரஷ்யாவின் கசகஸ்தான் பகுதியில் இருந்து கிளம்பிய இந்த விண்கலம் ஆறு மணி நேரத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்தது. அங்கு அவர்கள் சுமார் ஆறு மாத காலம் பணியாற்றுவார்கள்.
ஏற்கெனவே அங்கு உள்ள விஞ்ஞானிகளுக் காக இவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். அதில் 30 கிராம் எடையுள்ள கேவியர் எனும் உணவுப் பொருள் 15 பெட்டிகளும், ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் உறைய வைக்கப்பட்ட பால், சர்க்கரை யில்லாத கட்டங்காப்பி ஆகியவை அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து