முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு சிறை

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

ஐதராபாத் - காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. டி.ராஜேந்தரின் ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் முலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜீவிதா. அதன்பிறகு பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த இவர், நடிகர் டாக்டர். ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது ஹைதராபாத்தில் வசிக்கும் இவர்கள் தெலுங்கு திரைப்பட தயாரிப்பிலும் ஈடு பட்டு வருகின்றனர். இதுதவிர, ஜீவிதா தற்போது தெலங்கானா மாநில பாஜக பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு எவடைதே நாகேண்ட்டி எனும் தெலுங்கு சினிமாவை ஜீவிதா தயாரித்தார். இதில் ராஜசேகர் கதாநாயகனாக நடித்தார். இதன் உரிமையை வழங்குவதாகக் கூறி சோமசேகர ரெட்டியிடமிருந்து ரூ. 22 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்புக்கொண்டபடி திரைப்பட உரிமையை வழங் காமல் வாங்கிய தொகையை காசோலையாக திருப்பி வழங்கி யுள்ளார். ஆனால் அந்த காசோலை பணமில்லாமல் திரும்பி உள்ளது.
இதையடுத்து, பணத்தைத் திருப்பித் தரும்படி ஜீவிதாவிடம் பல முறை கேட்டுள்ளார் சோமசேகர். இதை அவர் கண்டு கொள்ளாததால் கடந்த ஜனவரி மாதம் எர்ர மஞ்சில் நீதிமன்றத்தில் சோமசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
எர்ர மஞ்சில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜீவிதா, தீர்ப்பு வெளியான பின்னர் தனது வழக்கறிஞர் மூலம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் மாலையே அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து