முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல்: காஷ்மீர் - ஜார்க்கண்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இரண்டு மாநிலங்களிலும் பொது மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் 87 தொகுதிகள் உள்ளன. இங்கு 72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில், பந்திபுரா, கந்தர்பால் மாவட்டங்களிலும், லடாக்கில் கார்கில் மற்றும் லே மாவட்டங்களிலும், ஜம்மு பகுதியில் ராம்பன், தோடா, கிஸ்த்வார் மாவட்டங்களிலும் 15 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 125 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 2 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.
1,787 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5,49,696 ஆண் வாக்காளர்களும், 5,00,539 பெண் வாக்காளர்களும், 15 திருநங்கைகளும் வாக்களிக்க உள்ளனர். இங்கு காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், பாஜக, மக்கள் குடியரசுக் கட்சி ஆகியவை பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. தேர்தலையொட்டி, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீர் தேர்தலை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி சுகாக் காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் தனது ஆய்வை நடத்தினார்.
ஜார்க்கண்ட் தேர்தலின் போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, உளவுத் துறை தெரிவித்துள்ளது. உளவுத் துறையின் தகவல்களை அடுத்து, ஜார்க்கண்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி உள்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுசைனாபாத் சட்டப்பேரவை தொகுதியில், சாலையின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து