முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்க் மாநாடு: பிரதமர் மோடி நேபாளம் சென்றார்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சு நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடியுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் நேபாளம் சென்றனர்.
சார்க் நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே சார்க் மாநாட்டின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது நேபாள பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சார்க் உச்சி மாநாட்டில் நான் பங்கேற்பது முதல் முறை. எனது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் வந்து சிறப்பித்தனர். அப்போதே அவர்களிடம் பல விஷயங்கள் குறித்து பேச முடிவு செய்தேன்.
அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவதே எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து