முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த சூழ்ச்சியாலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது: மம்தா

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பர்கானாஸ் - மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் இருந்து எந்த சூழ்ச்சியாலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
சராதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ரின்ஜாய் போஸ் கடந்த கைது செய்யப் பட்டதை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக மம்தா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் மம்தா பேசும்போது, “எங்களுக்கு எதிராக பாஜக சூழ்ச்சி செய்து வருகிறது. மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்வதில் இருந்து எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
மருந்துகளுக்கு நியாய விலைக் கடை தொடங்கிய முதல் மாநிலம் மேற்கு வங்கம். அரசு மருத்துவமனைகளில் இருந்த கட்டண வார்டுகள் இலவச வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. பெண் கல்வியை ஊக்குவிக்கவும் இளம்வயது திருமணத்தை தடுக்கவும் ‘கன்னியாஸ்திரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டமும் நாட்டில் முதல்முறையாக இங்குதான் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மம்தா, மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும் என்று சவால் விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து