முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் உயர் சாதியினரை விமர்சித்த முதல்வர் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

சாப்ரா - உயர் சாதியினரை வெளிநாட்டினர் என்று கூறிய பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு பலத்த அடி விழுந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், தலித் பிரிவைச் சேர்ந்தவருமான ஜித்தன் ராம் மன்ஜி முதல்வராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜியின் பேச்சுகள் பீகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவரை விரைவில் முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தரப்பு தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் ஜித்தன் ராம் மன்ஜி பேசுகையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் நான் மோடியின் ஆதரவாளராக மாறத் தயார் என்றார். இது கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சுழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, உயர் சாதியினர் அனைவரும் வெளிநாட்டினர் என்றும், தலித்துகள் மட்டுமே இந்தியாவின் பூர்வ குடிகள் என்று பேசினார்.
இதனால் ஐக்கிய தள தலைவர்கள் மத்தியில் மன்ஜி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் நிதிஷ்குமாரை ச ந்தித்து மன்ஜியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பீகார் முதல்வர் மன்ஜியின், உயர் சாதியினர் வெளிநாட்டினர். என்ற பேச்சை கண்டித்து சரண் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் ராஜ்கிஷோர் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் உயர்சாதியினர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது மிகவும் தவறான நடத்தையாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்களை தவறாக திசை திருப்பும் வகையிலும் அவரது பேச்சு அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த வழக்கு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராதே ஷியாம் சுக்லா முன்பு தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து